பக்கம்:சோனாவின் பயணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓர் அம்மா ஒட்டகமும் சோனு என்ற அதனுடைய குட்டியும் பாலைவனத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தன. அன்று வெய்யில் மிகவும் கடுமையாக இருந்தது. பிரகாசமான சூரிய வெளிச்சத்தில், சுட்டுப் பொசுக்கும் மஞ்சள் நிற மணல் பளபளத்தது. திடீரென்று சோனா நின்றது; மணலில் பாதங்களைப் புதைத்துக் கொண்டு,

“என்னால் இனி கொஞ்சம் கூட நடக்க முடியாது. ஒரே தாகமாக இருக்கிறது. எனக்குத் தண்ணீர் வேண்டும்” என்று முணுமுணுத்தது.

உடனே அம்மா ஒட்டகம் கீழே குனிந்து அதைப் பார்த்து, “கண்ணே, நீ தாகமாயிருப்பாய் என்பது எனக்குத் தெரியும். அதோ பார், தண்ணிர்! வெகு அருகில் உள்ளது” என்று கூறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/6&oldid=482893" இலிருந்து மீள்விக்கப்பட்டது