பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

திருப்புகலூரந்தாதி

திருப்புகலூர் அந்தாதியைப் பாடியவர் நெற்குன்ற வாணர் என்பதை அந்நூலிறுதியில் கண்ட ”களப்பாளன் நெற்குன்ற வாணன் அந்தாதி கலித்துறையே” என்ற தொடரால் அறியலாம். இந்நூல் சோழ நாட்டுத் திருப்புகலூர்ச் சிவபெருமான் பேரில் அந்தாதித் தொடையில் பாடப்பட்ட நூறு கட்டளைக் கலித்துறைகளை உடையது ; சொல் நயம், பொருள் நயங்களுடையது ; திரிபு என்னும் சொல்லணி சிறப்பாகப் பொருந்தியது.

சுந்தரர் ”தம்மையே புகழ்ந்து” என்று திருப்புகலூரில் பாடிய பாட்டின் பொருளைச் ”செல்வர் பால் கவி நூறு உரைத்துத் தாக்கு அமருக்கு முருகா அருளென் பர் ... ... புகலூரைப் போற்றி உய்யார்” என்று இரண்டாவது பாடலில் குறித்துள்ளார். நான்காவது பாட்டில் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றைத் ”தென்னன் முன்னே மாவடி வந்திக்கு மண் சுமந்தோர்” என்றமைத்தார். இறைவன் ”கொங்கு தேர் வாழ்க்கை” என்ற பாடலைப் பாடிய செய்தியை 4-ஆம் பாட்டில் ... , ”உரைத்த அப்பாவை முற்சங்கத்தில் ஏறி நின்று ஒதும் ஐயர்” என்று குறிப்பிட்டுள்ளார். 50-ஆவது பாட்டில் திருப்பழனம், திருவையாறு, திருநள்ளாறு, திருவெண் காடு, திருவிடை மருதூர் என்ற தலங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இறைவன் சுந்தரர் பெருட்டுப் பரவையாரிடத்தில் தூது சென்றமையை ”அன்னநடைப் பரவைக்குத் திருத்தூது சென்ற நளினத்திலே” என்று குறித்தார். இறைவனை வணங்குவதற்குத் திருமூலர் ”யாவர்க்குமாம்