பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மணவில் கூத்தன்[1]

ஊரும் பேரும்

மணவில் கூத்தன் என்பான் தொண்டை மண்டலத்து மணவில் என்னும் ஊரினன்; "மட்டார் பொழில் மணவில் வாழ் கூத்தன்" என்பது சாசனப் பாடல். இவன் வேளாண்குடியிற் பிறந்தவன். இவற்கு அருளாகரன், அரும்பாக்கிழான், நரலோக வீரன், காலிங்கர்கோன், பொன்னம்பலக்கூத்தன் என்ற பெயர்களும் வழங்கலாயின. இவனுக்கு மானாவதாரன் என்ற விருதுப் பெயரும் இருந்ததெனச் சித்தலிங்கமடம் என்ற ஊரில் கிடைத்த கல்லெழுத்தால் அறியப்பெறுகிறது. (No. 367 of 1909.)

அலுவலும் வெற்றிகளும்

இவன் முதல் குலோத்துங்கன் (1070-1120) காலத்துப் படைத்தலைவனாய் இருந்தவன்; குலோத்துங்கன் வேணாடு, மலைநாடு, பாண்டி நாடு, வடநாடு முதலிய நாடுகளில் பல போர்கள் நடத்தியபொழுது, இம்மணவில் கூத்தன் படைத்தலைமை பூண்டு வெற்றி பெற்றுத் தன் புகழையும் தன் அரசன் புகழையும் நிலை நிறுத்தினன். இவன் வெற்றிகளைக் கூறும் சாசனப் பகுதிகள் பின்வருமாறு :—

1. தென்னாடன் சாவேற்றின் திண்செருக்கை

அன்றமைத்தான் தொண்டையர்கோ னாங்கு.

  1. ’திருக்கோயில்’ என்ற திங்களிதழில் வெளிவந்தது.