உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

பொன் வேய்ந்தான்; பேரம்பலத்துக்குச் செம்பு வேய்ந்தான்; செம்பொற் காளம் செய்து கொடுத்தான்; “ஆடும் தனித் தேனுக்கு அம்பலத்தே கர்ப்பூரம்-நீடும் திருவிளக்கு நீடமைத்தான்.” பொன்னம்பலம் சூழப் பொன்னின் திருவிளக்குகளை அமைத்தான்; “ஆடும் தெளிதேனை ஆயிர நாழி நெய்யால் ஆடும்படி கண்டான்.”

“மல்லல் குலவரையா நூற்றுக்கான் மண்டபத்தைத் தில்லைப்பிரானுக்குச் செய்தமைத்தவன்” இவனே. இந்நூற்றுக்கால் மண்டபத்தில் 12 தூண்களில் விக்கிரம சோழன் திருமண்டபம் என்ற பெயர் காணப்படுவதனால், இத்தலைவனால் (மணவில் கூத்தனால்) விக்கிரம சோழன் ஆணையின்படி இத்திருப்பணி நடைபெற்ற தாதல் வேண்டும்[1] என்று அறிஞர் கருதுகின்றனர்.

“தில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகையை எல்லைக்குலவரை போல்” அமைத்தான்; புட்கரணிக்குக் கல்படிக்கட்டுகள் அமைக்கச் செய்தான்; “வீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும்” செய்வித்தான்.

திருநந்தவனத்தை ஏற்படுத்தினான்; நூறாயிரம் கமுகு மரங்களை வைத்தான்; ஒராயிரம் கறவைப் பசுக்களைக் கொடுத்தான் ; குழந்தைகளுக்குப் பாலும் எண்ணெயும் நாடோறும் கொடுக்கச் செய்தான்; தில்லைப் பேரேரிக்குக் கல்லினால் மதகு ஒன்று அமைத்தான்.

மாசி மாதத்தில் (மக விழாவில்) இறைவனைக் கடலில் நீராட்டுவித்து வீற்றிருக்கச் செய்ய ஒரு மண்ட-


  1. திரு. பண்டாரத்தார் - சோழர் வரலாறு - பகுதி 11 பக்கம் 77.