பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

பத்தைக் கட்டினான்; நீராடச் செல்லுவதற்கு ஒரு பெரு வழியொன்றும் அமைத்தான். அம்மண்டபம் இற்றை நாளில் சிதம்பரத்துக்கு அருகில் கிள்ளை என்னும் ஊரில் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.[1]

தில்லையில் சிவகாமக் கோட்டத்தை யமைத்தவன் இவனே; காமக்கோட்டத்தின் திருச்சுற்றினையும் இவன் கட்டுவித்தான்; இச்செய்திகளைக் கூறும் பாடல்கள் படித்து இன்புறத்தக்கன :-

நடங்கவின்கொள் அம்பலத்து நாயகச்செந் தேனின்
இடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக்கு-அடங்கார்
பருமா ளிகைமேல் பகடுகைத்த கூத்தன்
திருமா ளிகையமைத்தான் சென்று.

எவ்வுலகும் எவ்வுயிரும் ஈன்றும் எழிலழியாச்
செல்வியாள் கோயில் திருச்சுற்றைப்-பவ்வஞ்சூழ்
எல்லைவட்டம் தன்கோற் கியலவிட்ட வாட்கூத்தன்
தில்லைவட்டத் தேயமைத்தான் சென்று.

தேவாரம் ஒதுவதற்கும், இருந்து அன்பர்கள் செவிமடுத்து இன்புறுவதற்குமாக ஒரு மண்டபத்தைக் கட்டினான்.

“நட்டப் பெருமானார் ஞானங் குழைத்தளித்த
சிட்டப் பெருமான் திருப்பதியம்-முட்டாமைக்
கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்”

என்ற பாடற் பகுதி இதனை வலியுறுத்தும்.


  1. பிற்காலச் சோழர் சரித்திரம், பகுதி11, பண்டாரத்தார் பக்கம் 78.