பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

தரவியலாது.[1] (அருணிதி கலியன் அளித்த தொகையை வட்டிக்கு விடவில்லை ; இவ்வாறு வட்டி கணக்கிடப் பெற்றது என்பதே அறிதற்பாலது.)


ஈழக்காசு

இருபது ஈழக்காசு 10 கழஞ்சு பொன் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.[2] எனவே ஒரு ஈழக்காசு கழஞ்சு எடையுடையதென அறியலாம். ஈழக்காசு ஈழ நாட்டினின்று வந்த நாணயமுறை என்றும், சோழ அரசர் ஈழத்தை வெல்வதற்கு முன்னதாகவே காசுகள் அங்கு வழக்கிலிருந்தன என்றும், சோழ நாட்டில் 9, 10 நூற்றாண்டுகளில் இக்காசுகள் வழங்கப் பெற்றன என்றும், பராந்தகன் காலத்து ஈழக்கிரசும் ராசராசனது காசும் துாய்மையிலும் எடையிலும் ஒத்திருந்தன என்றும் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.[3]


அக்கம்

அக்கம் எத்தகைய நாணயம் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. 7 புத்தக்கம் (புது அக்கம்) ஒரு ஈழக்காசு என்று இக்கல்லெழுத்துப் பகர்கிறது. ’’அக்கம்

என்பது காசில் 12-ல் ஒரு பங்கு என்றும், கழஞ்சில் 24-ல் 1 பங்கு என்றும் உறுதியாகக் கூறலாம்.’’[4]


  1. K. A. N. COLAS Part II, Page 426.
  2. S. I. I. Vol. v No 720.
  3. K. A. N. COLAS Part II, Page 450.
  4. do do Page 450.