பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

களும் பயன்பட்டிருத்தல் கூடும் என்று கூறலாம். “ஒத்தமைத்த” என்ற சொற்றாெடரும் கவனிக்கத்தக்கது. செப்பேடுகள் ஒவ்வொன்றும் ஒரே அளவினதாக இருந்திருத்தல் வேண்டும் ; ஒவ்வொரு செப்பேட்டில் ஒவ்வொரு பதிகம்மட்டும் எழுதப்பட்டது போலும் என்று இதனால் கூர்ந்து அறியலாம்.

திருவதிகைத் திருப்பணிகள்

தில்லையில் பல திருப்பணிகளைச் செய்தவனாகிய மணவிற்கூத்தன் திருவதிகையில் செய்த திருப்பணிகளும் பல. “பொன்மகர தோரணமும் பூணணியும் பட்டிகையும், தென்னதிகை நாயகர்க்குச் செய்தமைத்தான் ’’; பொற் சதுக்கம், மேகடம்பம்[1] என்றிவற்றை சேர்ப்பித்தான்; மண்டபமும் மாளிகையும் எடுப்பித்தான் நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டினான்; திருக்கோயில் மடைப்பள்ளியையும் பெரிய திருச்சுற்றையும் கருங்கல்லால் கட்டுவித்தான்; பகைவேந்தரைவென்று கொணர்ந்த செம்பொன்னால் பரிகலங்களைச் செய்தான் ; வீரட்டர் கோயிலைச் செம்பொனால் வேய்ந்தான் ; ஆயிரம் நாழி நெய்யால் விரட்டானேசுவரருக்கு அபிஷேகம் செய்வித்தான் ; நல்ல திருநந்தாவனம் அமைத்தான் , ஐம்பதினாயிரம் கமுக மரங்களை வைத்து வளர்த்தான்; குராற்பசு ஐஞ்ஞூறு கொடுத்தான் ; 10 பொன் விளக்களை அமைத்தான் ; எண்ணில் வயல் விளக்கும் பேரே! ஒன்று அமைத்தான்; அருளாகர நல்லூர் என்று தன் பெயரால் ஒரு ஊரையும் ஆங்கொரு ஏரியையும் உண்டாக்கினான்.


  1. மேற்கட்டி