பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

குலோத்துங்க சோழபுரம் என்று குறிக்கப்பட்டுள்ளது (264 of 1924).

திருப்புலிவனம் என்ற ஊரிலுள்ள முதற் குலோத்துங்கனுடைய 45-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டிலிருந்து அரும்பாக்கிழான் நான்கு விளக்குகள் எரிக்கப் பன்னிரண்டு கழஞ்சு பொன் கொடுத்ததாக அறிகிறோம் (207 Of 1923).

திருப்பாசூர் என்பது செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு பாடல் பெற்ற தலம். இவ்வூர்க் கோயிலில் முதற் குலோத்துங்கனுடைய 45ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அது சிவப்பிராமணரும் ஜயதரபுரத்து நகரத்தாரும் முறையே நான்கும் ஆறும் விளக்குகளை எரிக்க அரும்பாக் கிழானிடமிருந்து பொன் பெற்றார்கள் என்று கூறுகின்றது.

எலவானாசூர் என்றவூரில் முதற் குலோத்துங்க சோழனுடைய 48-ஆவது ஆட்சியாண்டில் அரும்பாக் கிழான் பள்ளியறை நம்பிராட்டியாரை எழுந்தருளுவித்தான். அப்பள்ளியறை நம்பிராட்டியாருக்கு இறையா நரையூரான சோழகேரளச் சதுர்வேதி மங்கலச் சபையார் ஓடிப்போன இரண்டு கணக்கரது நிலங்களை அவர்கள் கொடுக்க வேண்டிய வரியின் பொருட்டு விற்றளித்தார்கள் (164 of 1906).

திருவதிகை, திருநாவுக்கரசருக்குச் சூலை நோய் நீங்கிய தலம். திருநாவுக்கரசரும் இத்தலத்தை அதி அரைய மங்கை என்று குறிப்பிடுவர். முதற் குலோத்துங்கனுடைய 48-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில்