பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

இவ்வூர் அதிராஜ மங்கல்யபுரம் என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தார் அரும்பாக் கிழானுக்குரிய 48,000 குழி புன்செய் நிலத்தை நன்செய் நிலமாக மாற்றுவதற்கு ஆதரவு அளித்த செய்தி கூறப்படுகிறது; அந்நிலம் திருநாவுக்கரச தேவமடத்துக்கு மடப்புறமாகவும் அளிக்கபட்டது (382 of 1921).

சித்தலிங்கமடம் என்றவூரில் முதற் குலோத்துங்க சோழனுடைய, ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டொன்று உள்ளது. அது வடமொழிச் சுலோகமாகும்; திருக்கோவலூர் ஆண்டபிள்ளை பட்டன் என்பான் எழுதியது. ”மணவிலாதிபதி சபாநர்த்தக காலிங்கராயன்” என்பான் அவ்வூர்ச் சிவன் கோயிலைப் புதுப்பித்தான் என்பது அச்சுலோகத்தில் கண்ட செய்தியாகும் (367 of 1909). இன்னோரு கல்வெட்டில்: விமானமும் கமுகுகள் சூழ்ந்த பிராகாரமும் ஒரு மண்டபமும் சகம் 1025-ல் வியாக்கிரபாத முனிவர் தொழும் திருவடிகளையுடைய சிவபெருமானுக்கு மணவிலாதிபதி அமைத்தனன் என்று கூறப்பட்டுள்ளது. (இவ்வூர்ப் பெருமானுக்கு வியாக்கிர பாதீஸ்வரர் என்பது வடமொழிப் பெயர்; திருப்புலிப் பகவர் என்பது தமிழ்ப் பெயர்.)

ஆத்தூர் எனப்படும் திருச்செந்தூர்த் தாலூகாவிலுள்ள ஊரில் கிடைத்த வடமொழிச் சுலோகமாகவுள்ள கல்வெட்டொன்று, அரும்பாக் கிழான் மகரதோரணம் ஒன்றை இறைவனுக்கு அளித்தான் என்றும் இரண்டு விளக்குகள் எரிக்கப் பொன் கொடுத்தான் என்றும் அறிவிக்கின்றது (405 of 1929-30). இக்கல்வெட்டில் அரசன் பெயர் ஜயதரன் என்றும், தலைமை அமைச்சன்


A. R. for 1930; Page 79, Para 21.

8