பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சேக்கிழார்

தொண்டை நன்னாடு

"உயிர்களுக்கு எல்லையில் கருணைத் தாயனாள் அரும் தவம் புரியத் துாய மாதவம் செய்தது "தொண்டை நன்னாடு; நடுநிலை ஒழுக்கத்துத் தலைமைசால் பெருங்குடி தழைத்தது தொண்டை நன்னாடு; பழையனூர் சிறுத் தொண்டர் தம் சொல்லையே காக்க வணிகன் பொருட்டு உயிர் நீத்த பெரும் சிறப்புடையது பெருந் தொண்டை நாடு: சேரனார் திருமலை நாட்டு வயவர்கள் மைத்துனக் கேண்மை பூண்டது பெருந்தொண்டை நாடு; செங்கண் மால் விடையார் திருக்காளத்தியும், ஆறுசூழ் அண்ணலார் திருவிடைச் சுரமும், நீள் வரைப்பின் உம்பர் நாயகர் திருக்கழுக்குன்றமும், செங்கண் மால் தொழும் திருமுல்லை வாயிலும், மறையவர் பூதிசாதனம் போற்றிய வல்லமும், மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற் பேறும், பருங்கை யானையை உரித்தவர் திருப்பாசூரும், மன்னவன் இறக்கிய வரியை 'ஒற்றியூர் நீங்க’ என்று எழுதும் திருவொற்றியூரும், மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டு இட்டங் கொண்ட காபாலிச் சரத்தான் மகிழும் திருமயிலாபுரியும், தண் பொழில் சூழ் திருவான்மியூரும், எவ்வுகங்களுள்ளும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் காஞ்சிமா நகரமும் முதலாய தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருத்தலங்கள் எண்ணான்கு கொண்டது தொண்டை நன்னடு; தீய என்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ்ந்ததும் தொண்டை நன்னாடு; தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகை விரி வாக்கினால் சொல்ல வல்ல