உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


திருவிளக்குத் திருத்தொண்டு

வேதாரண்யத்தில் ஒரு விளக்கு எரிக்க 90 ஆடுகளை இவ்வருணிதி கலியன் அளித்ததாகப் பராந்தக சோழனது 28-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக் கூறுகிறது.[1]

ஆனைமலைக் கோயில் கட்டிய காலம்

இனி, ஆனைமலையிலே நரசிங்கப் பெருமாள் கோயில் கட்டப்பெற்ற காலத்தை அறிதலும், ஏற்புடைத்தே. ”பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீண்முடி நிலமன்னவன்” என்று சீவரமங்கலத்துச் செப்பேடுகளில்

புகழப்பெற்ற நெடுஞ் சடையன் பராந்தகன் (765-790) என்னும் பாண்டிய அரசன் காலத்தில் இத்திருக்கோயில் அமைக்கப்பெற்றது. இவ்வரசனின்முதலமைச்சன் மாறன் காரி என்ற பெயருடையவன். இவனே கி. பி. 770-ல் நரசிங்கப் பெருமாள்கோயிலைக் குடைவித்து அக்கோயிற் கண்மையில் அந்தணர்களைக் குடியேற்றினன். இவன் தம்பி மாறன் எயினன் எனப்பெற்றான்; அவனே முக மண்டபம் அமைத்துக் கடவுள் மங்கலமும் செய்வித்தவன் ஆவன்.[2] கலி 3871-ல் இக்கற்றளியமைக்கப் பெற்றதென்று வடமொழிக் கல்வெட்டொன்றும் கூறுகிறது.[3]


  1. K.A.N. COLAS Part I, Page 426; 445 of 1904
  2. திரு. பண்டாரத்தார் - பாண்டியர் வரலாறு - பக்கம் 55-56.
  3. திரு. K. S. சீனிவாசபிள்ளை - தமிழ் வரலாறு - பிற். பக்கம் - பாகம் 154.