பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121


    கோலன் அநபாயன் வினவிய முத்திறக்
        குறிப்பைக் குறிப்பி னோர்ந்து
    சாலவுயர் திருக்குறளில் மூன்று இறையாக
        எழுதியவன் அரசு தாங்கி
    வாலறிவால் திருத்தொண்டின் புகழ் விரித்த
        சேக்கிழார் மலர்த்தாள் போற்றி”

என்பது அப்பாடல். கம்பர் பாடியதாகக் கருதப்படும் திருக்கை வழக்கம் என்னும் நூலிலும்,

        “மண்ணில் கடலில் மலையில் பெரியதென
        எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக்கை”

என்ற வரிகளில் இச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

இவர் அமைச்சர் தலைவராக வீற்றிருக்குங் கால்

    “எண்ணி இதுசெய் திடின் இதனால்
        எய்தப் படுவ(து) இஃ(து) எய்தா (து)
    இரியப் படுவ(து) இஃ(து) உண்மை
        எய்தப் படலாற் பயனின்றே
    கண்ணி யவதை மறந்தொழிக
        நள்ளார் முனை மேல் இப்பொழுது
    நயந்து படர்ந்து பொருதுவமே
        நமதே யாகும் நகுவாகை
    தண்ணிம யம்போற் புகழ்ப்போர்வை
        தாங்கற் காய கருமமிது
    தப்பா தாற்றப் பொருள் வருவாய்
        தவாதுண் டாமென்(று) இவைமுதலாங்
    கண்ணி வளவற்(கு) உரைத் தருள்செய்
        கனிவாய் முத்தம் தருகவே
    கனகக் குன்றை யனகசெழுங்
        கனிவாய் முத்தம் தருகவே”

என்று சேக்கிழார் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் கூறிய வண்ணம், ‘நன்கு ஆராய்ந்து இச்செயல் செய்தால் இச்-