பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

எனச் செப்பினர். மேலுஞ்சிலர் ’எல்லாத் தீர்த்தங்களும் விளைவியாத சுத்தி தருங்கவி’ என்றனர். பின்னும் ‘பத்தி தருங்கவி’ என்றும், பல்லோர்க்கும் முத்தி தருங்கவிஎன்றும் பலரும் புகன்றனர்; இம்மட்டோ ?

‘நனவி லிரும்புகழ் மிகுசம் பந்தரும்
நாவுக் கிறைய வரும்
நாவலர் கோவும் சிரகர கம்பித
நன்கு புரிந்தருள
முனிவில் தமிழ்க்கவி பாடிய புலவன்’

என்று சேக்கிழாரையும் அவர் பாடல்களையும்புகழ்ந்துரைத்தனர். புராணவுரை நிறைவேறிய பின் சேக்கிழாரையும் அவரியற்றிய புராணத்தையும் யானைமேலேற்றித் தானும் ஏறி ’இணைக்கவரி துணைக்கரத்தால் வீசி இது வன்றாே யான் செய்த தவப்பயன்’ என்று அரசன் மகிழ்ந்து உலாவரச் செய்தனன். பின்னர்த் தொண்டர் சீர் பரவுவார் என்ற திருப் பெயரைச் சேக்கிழாருக்குச் குட்டி அரசனும் ஏனையோரும் வணங்கினர். முன் நம்பியாண்டார் நம்பிகள் தொகுத்த பதினொரு கிருமுறைகளோடு சேக்கிழார் பாடிய இப்புராணத்தையும் பன்னிரண்டாம் திருமுறை என்று நியமித்துச் செப்பேடு செய்து நடராசர் சந்நிதியில் ஏற்று வித்தார்கள். பின்னர்ச் சேக்கிழார் பெருமானும் தில்லை நகரில் அடியார்களுடன் கூடி அருந்தவந் தனிலிருந்து ஒரு வைகாசிப்பூச நாளில் சிவ பெருமான் திருவடி நீழலை எய்தினார்.

புராணத்துக்கு இட்ட பெயர்

’’இங்கிதன் நாமங் கூறின்..... திருத்தொண்டர் புராணம் என்பாம்’’ ‘ என்ற சேக்கிழார் வாக்கின்படி இந்நூலுக்குத் திருத்தொண்டர் புராணம் என்பது சேக்-