பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127


காலம்

சேக்கிழார் தம்காலத்து அரசனைத் தம் புராணத்தில் பத்து இடங்களில் குறித்துள்ளார். அப்பத்து இடங்களிலும் அநபாயன் என்றே குறிக்கின்றர். சேக்கிழார் புராண ஆசிரியர் (உமாபதி சிவம்) ஓரிடத்தில் (செய் 98) அநபாயன் என்று குறிக்கின்றார். இவ்வாசிரியர் அபயன் என்று (செய் 59) குறித்தாற் போலவே, சேக்கிழாரும் இரண்டிடங்களில் அபயன் என்று குறித்துள்ளார். பெரிய புராணத்தில் பத்து இடங்களில் அநபாயன் குறிக்கப்பெற் திருத்தலின் அன்னவனே சேக்கிழார் காலத்தரசன் என்று துணிந்து கூறலாம். அநபாயன் பேரம்பலம் பொன் வேய்ந்தவன் என்று சேக்கிழார் பெருமான் செப்புவர். இவ்வநபாயனுக்குத் திருநீற்றுச் சோழன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

அநபாயன் யார் ? : இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய 7-ஆம் ஆட்சியாண்டிற்குரிய திருவாரூர்க் கல்வெட்டில் (269 of 1901) ”ஆடிய நம்பிக்கும் பரவை நாச்சியார்க்கும் அர்ச்சனா போக இறையிலியாக அநபாய நல்லூர் என்னும் திருநாமத்தால்” என்ற பகுதியாலும், திருவாரூரிலுள்ள வடமொழிக் கல்வெட்டொன்றில் (73 of 1890) வியாக்கிராக்ரஹாரா ஹேம சபா நடேச பாதாரவிந்த மதுப அநபாயதாமாங்“[1] என்ற பகுதியாலும், இவனது 12-ஆம் ஆட்சியாண்டுக்குரிய களத்தூர்க் கல்வெட்டில் (346 of 1911) இவனது திருமந்திர வோலை


  1. இப்பகுதியின் பொருள்:- சிதம்பரத்தில் பொற்சபையில் உள்ள நடேசப் பெருமானின் திருவடித் தாமரைகளில் ஊதும் வண்டாக உள்ள அநபாயன் என்ற பெயருடையவன்.