உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

“அநபாய மூவேந்த வேளான்” என்று காணப்படுவதாலும், அநபாயன் என்ற சிறப்புப் பெயர் இரண்டாங் குலோத்துங்க சோழனுக்கே உரியது என்பது உறுதியெய்தும். இவ்விரண்டாங் குலோத்துங்க சோழன் கி. பி. 1133 முதல் கி. பி. 1150 வரை அரசாண்டவன்; விக்கிரம சோழனுடைய மகன்; இரண்டாம் இராசராசனுடைய தந்தை.

திருமழபாடிக் கல்வெட்டு : சேக்கிழார் எக்காலத்தில் வாழ்ந்தார் என்பதை அறிய இரண்டாம் இராசராச சோழனுடைய 17-ஆம் ஆட்சியாண்டுக் குரிய திருமழபாடிக் கல்வெட்டுச் சான்று பகர்கின்றது. அக்கல்வெட்டுப் பகுதியாவது:-

”ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் இராம தேவனை உத்தம சோழப் பல்லவ ராயன்” (95 of 1920) என்பது.

பாலறாவாயர் : மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய இரண்டாம் ஆண்டிற்குரிய கோட்டுர்ச் சாசனத்தில் (445 of 1912) சேக்கிழார் பாலறாவாயர் என்று ஒருவர் குறிக்கப் பெறுகிறார் சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்ற சிறப்புப் பெயருண்மையை உமாபதி சிவாசாரியர் தாம்பாடிய சேக்கிழார் புராணத்தே குறிப்பிட்டமையா லறியலாம். சேக்கிழாருக்குப் பாலறாவாயர் என்ற இளவல் ஒருவர் இருந்தமையையும், சேக்கிழார் பெரிய புராணம் பாடிய பின்பு அரசர் பாலருவாயரை அழைத்து அவரையே தம்