131
பாடுசெய்யப் பெறுகிறது. இத்தலத்தின் மேல் தனக்குள்ள அன்பு காரணமாகத் தொண்டை நாட்டிலே குன்றத்தூர் எல்லையில் திருநாகேச்சுரத்தைப் போன்றதோர் கோயிலைக் கட்டி அவ்வூர்ப் பகுதிக்கும் திருநாகேச்சுரம் என்று பெயரிட்டார். அக்கோயிலில் சேக்கிழாருக்கும் தனிக் கோயில் இருக்கிறது. உமாபதி சிவாசாரியாரும் இச் செய்திகளைப் பின்வரும் பாடலில் புகன்றுள்ளார்:-
“ஆங்கவர் நீர் நாட்டு நித்தனுறை திருநாகேச் சுரத்தில்
நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்” [அன்பு
(செய் 18)
என்பதும்,
“தம்பதிகுன் றத்துாரில் மடவ ளாகம்
தானாக்கித் திருக்கோயில் தாபித் தாங்கண்
செம்பியர் கோன் திருநாகேச் சுரம்போ லீதுந்
திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி
அம்புவியில் அங்காங்க வைப வங்கட்(கு)
ஆணபதி கலந்திருநாள் பூசை கற்பித்(து)
இம்பர் புகழ் வளவன்அர சுரிமைச் செங்கோல்
இமசேது பரியந்தம் இயற்று நாளில்” (செய். 1 9)
என்பதும் அவை.
சேக்கிழாரைப்பற்றிய நூல்கள்
இங்ஙனம் சைவசமய உலகிற்கு ஆதவன் போன்ற சேக்கிழார் பெருமானின் வரலாற்றை உமாபதி சிவாசாரியார் இயற்றிய திருத் தொண்டப் புராண வரலாறு என்னும் இலக்கியத்திலும், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றிய சேக்கிழார்