உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

நான்காம் ஆட்சியாண்டு முடியத் தமிழகத்தில் காணப்படுகின்றன.

பவணந்தி முனிவர்

அமராபரணன் சீயகங்கன் காலத்தவரே பவணந்தி முனிவராவர். பவணந்தி முனிவர் இவ்வரசன் வேண்டு கோட்படியே நன்னூலை இயற்றினாரென்பது, அந்நன்னுாற் சிறப்புப் பாயிரத்தால் அறிந்ததாகும்.

குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத்
தொகைவகை விரியில் தருகெனத் துன்னார்
இகலற நூறி இருநில முழுவதும்
தனதெனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோல் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தன னாக...

என்பன அச்சிறப்புப் பாயிரவடிகள். பல்கலைக் குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் சனகாபுரத்தவல் என இச் சிறப்புப் பாயிரத்துப்,

"பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பின் பவணந்தி"

என்ற அடிகள் தெளிவுப்படுத்துகின்றன. சனகாபுரம் (சனகை) என்பது மைசூர் மாவட்டம் திருமுக்கூடல் நரசிபுரம் தாலுகாவிலுள்ள சனாகாதபுரம் ஆகும் (திரு.