பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

அலுவல்

கி. பி. 1146 முதல் 1163 வரை சோழப் பேரரசனாக விளங்கிய இரண்டாம் இராசராச சோழன் காலத்திலும், அவனுக்குப் பிறகு அரசாண்ட இரண்டாம் இராசாதிராச சோழன் காலத்தில் ஏறத்தாழ எட்டாண்டுகள் (கி. பி. 1171) வரையிலும் இவன் சிறந்த படைத்தலைவனாக விளங்கியவன். இரண்டாம் இராசராச சோழன் காலத்திலே பாண்டி நாட்டுப் போரில் ஈடுபட்டுச் சிங்களப் படையை வென்று தன் புகழ் நிறுவியவகைக் காணப் படுதலின், இவன் அந்நாளில் சோழப் பேரரசில் திகழ்ந்த பெருந்தானத் தலைவன் என்பது உறுதி. பல்லவராயன் பேட்டைச் சாசனத்திலிருந்து (433 of 1924) மேலே குறிப்பிட்ட சிங்களப் படையை வென்ற செய்தியை அறிய வருவதோடு இவனுடைய இன்னொரு அலுவலும் தெரிய வருகிறது. இரண்டாம் இராசராச தேவருடைய பத்துக் கோயில் கொத்துக்களுக்கும், யானை குதிரை முதலிய எல்லாத் துறைகளுக்கும் தலைவனாகவும்: முன் ஏவல் செய்யும் ஏற்றமும் பெற்றிருந்த அரசனது அரண்மனை உள்துறைப் பேரலுவலனகவும் இருந்தான் என்று மேற் குறித்த பல்லவராயன் பேட்டைச் சாசனத்தின் 6-7-ஆம் வரிகளில் குறிக்கப் பெற்றுள்ளது.

சேரனை வென்றமை

பல்லவராயன் சேரனைப் போரில் வென்று அவன் பால் திறைகொண்டு வந்தான் என்ற செய்தி தக்கயாகப் பரணியிலுள்ள பின்வரும் தாழிசையால் அறியலாம் :-

”வில்லவனைத் திறைகொண்ட வேற்றண்டகாபதியைப்
பல்லவனைப் பாடாதார் பசியனைய பசியினமே” (தக், 236)

இத்தாழிசையில் கண்ட தண்டகா பதியைத் தக்கயாகப் பரணியின் உரையாசிரியர், 'தொண்டை நாட்டுக் குளத்-