பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141


இரண்டாம் இராசாதிராசன் அரசன் ஆனமை.

இரண்டாம் இராசராச சோழன் நோய்வாய்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தான். அந்நாளில் அவனுக்கு ஈராண்டும் ஓராண்டும் நிரம்பிய இரு குழந்தைகள் இருந்தனர். மிக்க இளங்குழவிகளாதலின் அன்னோர்க்கு முடிசூட்ட இயலாமைக்கு மன்னன் பெருங்கவலை கொண்டான். அந்நாளில் கங்கைகொண்ட சோழபுரத்தில் சில அரச குமாரர்கள் இருந்தனர். அவர்களை வருவித்து அவர்களுள் விக்கிரம சோழ தேவருடைய பேரனாகிய நெறியுடைப் பெருமாளின் மகன் எதிரிலிப் பெருமாள் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி அந்நாளிலேயே இரண்டாம் இராசராச சோழன் இறந்து போனான்.

அப்பொழுது சோழ நாட்டில் ஆட்சி உரிமை பற்றிக் கலகம் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அதனால் அமைச்சர் தலைவனாகிய பல்லவராயன் பழையாறையில் இருந்த ஆயிரத்தளி படை வீட்டிலிருந்து இராசராசனுடைய அந்தப்புர மகளிரையும், இளங் குழந்தைகள் இருவரையும், பரிவாரங்களோடு அழைத்து வந்து, இராசராசபுரத்திலே (தாரசுரத்தில்) காவல்மிக்க இடத்தில் இருக்கச் செய்து காப்பாற்றினான்; நாட்டுக்கும் எந்தக் குறைவும் உண்டாகாதவாறு பார்த்துக் கொண்டான்; இளவரசனாக ஆக்கப்பட்ட எதிரிலிப் பெருமாளை நான்காண்டுக் காலம் வரையிலும் இளவரசனாகவே இருக்கச் செய்து பின்னர் (இரண்டாம்) இராசாதிராசன் என்று அபிடேகம் செய்வித்துச், சோழப் பேரரசனாக ஆக்கினான் ; இரண்டாம் இராசாதிராச சோழன் ஆட்சியிலும் தலைமை அமைச்சனாக வீற்றிருந்து அரசியல் பொறுப்பையும்