146
V. உடன் பிறந்தார்
| விழியூருடையானுக்குப்புக்க பெண்ணுக்கும் அவள் மகளுக்கும் | 2- | வேலி நிலம் |
| ——— | ——— | |
| ஆக அளிக்கப்பட்ட நிலம் கூடுதல் | 40 | வேலி நிலம் |
| அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு | ——— | ——— |
மேற் குறித்தவற்றிலிருந்து பெருமான் நம்பிப் பல்லவராயனுக்கு நான்கு மனைவிமார்கள் இருந்தனர் என்றும், ஐந்து ஆண்மக்களும் மூன்று பெண் மக்களும் இருந்தனர் என்றும், ஒரு மகன் இவன் இறப்பதற்கு முன்னதாகவே இறந்திருத்தல் கூடுமென்றும், இவன் இறந்த பிறகும் இவன் தாயாகிய வைப்பூருடையான் மகளார் உயிர் வாழ்ந்திருந்தாள் என்றும், இவனுக்கு ஒரு உடன் பிறந்தாள் இருந்தாள் என்றும் தெரிய வருகிறது.
மேல் III-ல் உறவினர் என்ற பகுதியில் குறிக்கப்பட்ட இராசராச தேவர் எனப்படுபவன் பெருமான் நம்பிப் பல்லவராயனுக்கு நெருங்கிய உறவினனாகவும், அவன் அன்புக்கு உரியவனாகவும் இருந்திருக்கவேண்டும். இவ் இராசராச தேவர் என்பானை இரண்டாம் இராசராச சோழன் என்பாரும் உளர்.[1] அக் கருத்துப் பொருந்துவதாகத் தோன்றவில்லை. “உடையார்“ என்னும் அரசருக்குரிய அடைமொழி இன்மையும் ஆகைப்பட்டனல்லன் என்ற கருத்தையே வலியுறுத்தும்.
- ↑ Colas, K. A. N. Vol. II p. 92. -வேலி நிலம்