பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

பிரமதேயம்

“வேதியர் தொழுதெழு விசயமங்கை“ என்று அப்பர். குறித்தமையின் இங்கு வேதியர்கள் பலர் வாழ்ந்திருத்தல் கூடும். இடைக்காலத்திலும் இத்தலத்தில் வேதியர் நிறைந்து வாழ்ந்திருந்தமையின் சோழர் கல்லெழுத்துக்களில் இவ்வூர் பிரமதேயமாகவே குறிக்கப்பெற்றது; “வடகரைப் பிரமதேயம்[1] பெரிய வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலம் (165 of 1929) என்றமை காண்க. இச்சிலைமேல் எழுத்தினின்று இவ்வூர்க்குப் “பெரிய வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம்“ என்ற பெயர் வழங்கிவந்தது என்றும் அறியலாம். இறைவன் விஜய மங்கலத்து மகாதேவர் எனப்பெற்றார் (164 of 1929).

கோயில் திருப்பணி செய்தவன்

இச்சிறப்பு வாய்ந்த கோயிலைக் கருங்கல் திருப்பணி செய்தவனைக் குறித்துக் கோவிந்தபுத்தூர்க் கோயிலில் பல கல்லெழுத்துக்கள் கிடைத்துள்ளன. அத்தலைவன் ’அம்பலவன் பழுவூர்நக்கன்’ என்ற பெயருடையவன். இவன் உத்தமசோழனது 10ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 979) முதற்கொண்டு (170 of 1929), முதலாம் இராசராசனின் 7-ம் ஆட்சியாண்டு (கி. பி. 992) வரை (160 of 1929) கல்லெழுத்துக்களில் குறிக்கப் பெற்றுள்ளான்.

சிறப்புப் பெயர்களும் பண்புகளும்

பழுவூர்நக்கன் உத்தமசோழனது பெருந்தரம்; உத்தம சோழனால் விக்கிரமசோழமாராயன்[2] என்ற


  1. பிரமதேயம்-அந்தணர்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்.
  2. இச்சிறப்புப் பெயரை அளித்தமையால் சோழனுக்கு விக்கிரம சோழன் என்ற பெயரிருந்த பெறும்.