பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148


அதிகைமான் என்று குறிப்பிடப்பெறுகிறான்- னால் இவன் அதிகைமானை வென்றிருத்தல் கூடும் என்று அறியப்பெறும். சகரயாண்டு 1108-க்குரிய (கி.பி. 1186) விருத்தாசலம் கோயிலில் கண்ட பாடல் சாசனத்தில் (74 of 1918; S. 1. . Vol XII No 263) இவன் முன்னேர்கள் சிலருடைய வரலாறுகள் கூறப்படுவதோடு, இவன் அதிகைமானை வென்றமையும் கூறப்ட்டுள்ளது.

'கண்டராதித்தன் வாசலுக்கு மேற்கே புறப்பட்டுக் டக மாராயன் கூடலும் அதிகைமானாடும் அழித்து வெற்றிக்கொடி யுயர்த்தி அனுமனும் பொறித்தான்' என்ற கல்வெட்டுப் பகுதி. இதில் கண்டராதித்த வாசல் என்பது இந்தக் கல்வெட்டிருக்கும் கோபுரமாகக் கருதப்படுகிறது. இதில் கண்ட கூடல் என்பது சேலம் மாவட்த்திலுள்ள தீர்த்தாமலை என்னும் ஊர் என்பர். இந்தக் கல்வெட்டின்படி ஒன்று திருவெண்ணெய் நல்லூர்க் புரீஸ்வரர் கோயிலிலேயும் காணப்படுகிறது. (464 21: S I Vol xi No 264). இவ்விரு கல்வெட்டுக்களிலிருந்து இவன் ஆளப்பிறந்தான் என்ற சிறப்புப் பெயரை உடையவன் என்றும், அதிகைமானை வென்றவன் என்பதும், கூடல் என்பது கற்கடக மாராயனுக்கு உரிது என்றும், இவனுடைய கொடி அனுமக்கொடி என்றும் அறியலாம்.

இவ்வீர சேகரக் காடவராயனின் மகனாகக் கருதப்படுபவன் கூடல் ஏழிசைமோகன் மணவாளப்பெரு வாணிலை கண்ட பெருமாளாகிய இராஜராஜக் காடவராயன்.

சமோகன் இராஜராஜக் காடவராயன்

ஏழிசை மோகன் என்பது இவன் முன்னோர்களும் கொண்டிருந்த சிறப்புப் பெயர்களுள் ஒன்று. ஏழிசை