பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகள் ஒருத்தியைத்திருமணம் செய்வித்துச் சிறப்புச் செய்தான். அந்நாள் முதல் இவன் மணவாளப்பெருமாள் என்று வழங்கப் பெற்றனன் என்று ஆய்வாளர் பகர்வர் (திரு. பண்டாரத்தார், சோழர் வரலாறு பாகம் 2, பக்கம் 179-180). வாணிலை கண்ட பெருமாள் என்ற சிறப்பு எய்துவதற்கு முன்னதாகவே மணவாளப் பெருமாள் என்ற சிறப்பை இவன் எய்தியிருத்மல் கூடும். இதனை 'மணவாளப் பெருமாளான ரிலே கொண்ட பெருமாளான ராஜராஜக்காடவராயர்’’ என்ற கல்வெட்டுத் தொடரில் கண்ட முறை யினின்று கூர்ந்து அறியலாம். இவனை முதற் கோப்பெருஞ் சிங்கன் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

சோழனோடு முரண்பட்டமை

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் குறுநில மன்னர்கள் தத்தம் நாட்டுப் பகுதிகளைச் சுதந்திரம் பெற்றே ஆண்டு வந்தார்கள். ஒரோவழித் தங்களுக்குள் முரண்பட்டுப் பேரரசுக்கு இடையூறு விளைவித்தவரும் உண்டு. அவ்வமயங்களில் சோழப் பேரரசின் நன்மையின் பொருட்டும் சோழப் பேரரசின் பெருமைக்கு இழுக்கு வாரா திருத்தற் பொருட்டும், பலரும் ஒருங்கு சோழ அரசனுக்கு அடங்கியிருப்பதாக உடன்படிக்கை செய்து கொள்வதுண்டு. அரசனது ஆணையை மீறி நடந்தால் அரசனிடம் அன்புடையவர்கள் எல்லோரும் ஓருங்கு சேர்ந்து பேரரசனைப் பகைத்த குறுநில மன்னன் இடம் தாமும் பகைமை பூண்டு உடன்படிக்கை செய்து கொள்வதுமுண்டு.

அங்ஙனம் செய்த உடன்படிக்கைகளில் மூன்றாம் குலாத்துங்கனுடைய 27-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருவண்ணாமலைக் கல்வெட்டில் பதின்மர் தலைவர்கள்