பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

4 விளக்குகள் எரிக்கவும் (169 of 1929) இவன் ஆடுகளைத் திருவிசய மங்கையில் அளித்துள்ளான். இவனுடைய தொண்டு கூகூரிலும் நிகழ்ந்துளது; அங்கு ஒரு விளக்கு எரிக்க 90 ஆடுகளை அளித்ததாக ஒரு கல்வெட்டினின்று (291 of 1917) அறிகிறோம்.

கோயிலதிகாரியை நியமித்தல்

இவன் முதல் இராசராசசோழனது 7-ஆம் ஆட்சி யாண்டில் வங்கிப்புரத்துச் சேட்டபோசன் வெண்ணய கிரமவித்தன்[1] என்பானைக் கோயிலதிகாரியாக நியமித்தான் (160 of 1929). கோயில் காரியம் பார்ப்பவர்களை மேற்பார்வை செய்ய இவ்வதிகாரிக்கு உரிமை தரப்பெற்றது. அன்றியும் வேளாளர் இவனை எதிர்த்தால் வேலையினின்று நீக்கவும், பிராமணர் எதிர்த்தால் 25 கழஞ்சு பொன்தண்டம் விதிக்கவும் இவற்கு அதிகாரம் அளிக்கப் பெற்றது (ARE 1929 1129).

பழுவூர்நக்கப்புத்தேரி

மேற்கூறியாங்கு இரண்டு பேரரசர்களால் சிறப்பிக்கப் பெற்றமையின், பழுவூர்நக்கன் சோழநாடு முழுவதும் நன்கு அறியப்பெற்றவகை அந்நாளில் விளங்கியவனாதல் கூடும். இவன் காலத்துக்கு ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது இரண்டாம் இராசேந் திரனின் 4-ஆம் ஆட்சியாண்டில் கி. பி. 1055ல்) தரப்.


  1. கிரமவித்தன்-வேதத்தைக் கிரமமுறையில் அத்தியயனம் செய்தவன். [கிரமமாவது முதற்பதமும் இரண்டாவது பதமும் கூறிப், பின்னர் இரண்டாவது பதமும் மூன்றாவது பதமும் கூறிப், பின்னர் மூன்றாவது பதமும் நான்காவது பதமும் கூறி, இங்ஙனமே தொடர்ந்து சொல்லுவது].