பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிற்றிங்கணுடையான்[1]

முன்னுரை

ஈங்கா[2] நாட்டின்கண்ணது சிற்றிங்கண் என்னும் ஊர். இச் சிற்றிங்கண் ஊரவன் சிற்றிங்கணுடையான் எனப்பெற்றான். இவனது இயற்பெயர் கோயில்மயிலை என்பதாம். இவன் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் காலத்தில் பராந்தகமூவேந்த வேளான் என்று சிறப்பிக்கப்பெற்றான். ஆகவே இச் சுந்தரசோழன் மகனாகிய ஆதித்தகரிகாலன் கல்வெட்டுக்களில் சிற்றிங்கணுடையான் கோயில் மயிலை பராந்தக மூவேந்த வேளான் என்று குறிக்கப்பெற்றனன் இவன் திருவிடை மருதூர்க் கோயிலுள் ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரிகளாகத்திகழ்ந்தான்.

ஆதித்தகரிகாலன்[3]

ஆதித்தகரிகாலனை, இரண்டாம் ஆதித்தன் என்பர் ஆராய்ச்சியாளர். 957 முதல் 970 வரை ஆண்ட


  1. இது ஞானசம்பந்தத்தில் வெளிவந்தது.
  2. இங்கண் நாடு எனினும் ஆம் ; அருமொழிதேவ வள நாட்டு இங்கணாடு என்றும் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு இங்கணாட்டு இங்கண் என்றும் ஒரே கல்லெழுத்தில் காணப்படுக்கின்றமையின் (70 of S.I.I. Vol II Part III) இவ்விரு வளநாடுகளுள் ஒன்றின் கண்ணது சிற்றிங்கண் இருந்த இங்கணாடு என்று கூறலாம்.
  3. ஆதித்த கரிகாலனும் பார்த்திவேந்திரபன்மரும் ஒருவரேயாதல் கூடும் என்பர் ஒருசாரார்; இது குறித்து இந்நூலுள் “பார்த்திவேந்திராதிபன்மன்” என்ற கட்டுரை காண்க.