உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

திருவிடை மருதில் உடையார் திருமுன் ஆரியக்கூத்து[1] ஆடுவதற்குப் பதினாற்கலம் நெல் கொடுப்பதற்காக ஒரு வேலி நிலத்தை அவர்கள் ஒதுக்கினர்கள். இச்செயல் இரண்டாம் ஆதித்தனின் 4-ஆம் ஆட்சியாண்டில் நடை பெற்றது. இத்தகைய கூத்து நிலையக நடத்த இவ்வதிகாரி முயற்சி எடுத்துக்கொண்ட மையான் நாகரிகக் கலைகளை வளர்ப்பதில் இவனுக்கிருந்த ஆர்வம் புலப்படு கின்றது.

படிமாற்றுயர்த்தல்

ஆதித்தகரிகாலனது 4 ஆவது ஆட்சியாண்டு 170 ஆவது நாள் குறிப்பிடப்பெற்ற கல்லெழுத்தொன்று[2] ஒரு அரிய செய்தியை அறிவிக்கின்றது. திரைமூர், சாஸனத்துள் கண்டவண்ணம் ஒரு குடி நீக்கி தேவதானம்;[3] ஆண்டுதோறும் பஞ்சவாரமாக 260 கலம் நெல் கொடுக்க வேண்டும். ஆனால் படிமாற்றில் [4]நூற்றறுபது


  1. புராண இதிகாசக் கதைகளைத் தழுவிவரும் கூத்து ஆரியக்கூத்து எனப்பெறும் மு. ரா. ஆராய்ச்சித் தொகுதி - பக்கம் 453 அடிக்குறிப்பு.
  2. 214 of 1907: S. I I I 203.
  3. பழங்குடிகளை நீக்கிக் கோயிலுக்கு அளிக்கும் நிலம் அல்லது ஊர் இதனால் கோயிலே மேல்வாரம் குடிவாரம் இரண்டும் அனுபவிக்க முடியும் (S. I. T. I. Vol III Part II Page 1418).
  4. படிமாற்று - Scale of expenses in the temple; செலவுத் திட்டம்.