பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பிராபாகரம்[1]

“யாகங்களை எவ்வாறு செய்வது என்பதும், மந்த்ரங்களை எம்முறையில் கூறவேண்டும் என்பதும், எச்செயல்கள் அங்கி எச்செயல்கள் அங்கம் என்பதும், இவை போன்ற பலவும் ச்ரெளதஸுத்ரங்களிலும் க்ருஹ்ய ஸுத்ரங்க்ளிலும் கூறப்பட்டன. வேதத்தில் பூர்வ காண்டத்தில் மந்த்ரங்கள் யாகங்களில் வழங்கவேண்டிய முறையிலே கூறப்படாமையாலும், எச்செயல்கள் அங்கி எவை அங்கம் என ஆங்குக் கூறப்படாமையாலும், அவையெல்லாம் மந்த்ரங்கள், விதிகள், அர்த்தவாதங்கள் இவற்றின் ஆராய்ச்சியால் அறிதல் வேண்டும். வேத வாக்கியங்களில் முரண்பாடு இருப்பின் எதனைக் கொள்ளல் வேண்டும் என்பதும், வேத வாக்கியத்துக்கும் ஸ்மிருதி வாக்கியத்துக்கும் முரண்பாடு இருப்பின் யாது பிரமாணமாகும் என்பதும், இவை போன்ற பலவும் இவ்வாராய்ச்சியால் அறிதல் கூடும். இவ்வாராய்ச்சி நூலுக்குப் பூர்வமீமாம்ஸா எனப்பெயர். பூர்வமீமாம்ஸாவை முதன்முதலில் சாஸ்திரமாக இயற்றியவர் ஜைமினி மஹர்ஷியாவர். இவர் சுமார் கி. மு. 600-ல் இருந்தவர். மீமாம்ஸ ஸுத்ரம் 12 அத்தியாயங்களைக் கொண்டது. இதற்கு சபரஸ்வாமி என்பவர் பாஷ்யம் இயற்றினர். இவரது காலம் கி. பி. 200 என்பர். இவர்க்குப்பின் ஆசார்ய சுந்தரபாண்டியன் மீமாம்ஸா வார்த்திகம் எழுதினர். இவர்க்குப் பிறகு குமாரில பட்டர் சபரபாஷ்யத்துக்கு உரை எழுதினர்.


  1. இத்தலைப்பில் எழுதியிருப்பவை ஸ்ரீ P. S. சுப்பிரமணிய சாஸ்திரிகள் எழுதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்ட ‘வடமொழி நூல் வரலாறு‘‘ என்ற நூலில் பக்கம் 240 - 2 45 ல் எழுதப்பெற்றுள்ளனவாம்.