27
முடையார் என்று குறிப்பிடப்பெற்றுள்ளார் எனல் உறுதியாதல் காண்க.
மதுராந்தக மூவேந்தவேளான்
இரண்டாம் ஆதித்தன் கல்வெட்டுக்களில், சிற்றிங்கணுடையான், பராந்தக மூவேந்த வேளான் என்று சிறப்பிக்கப் பெற்றான் என்பது முன்னரே கூறப் பெற்றது. கி. பி. 970 முதல் 984 வரை ஆட்சி செய்த உத்தம சோழன் காலத்திலும் இவன் திருவிடை மருதூரில் சில காலம் ஸ்ரீ காரியம் ஆராய்கின்றவனாகவே காணப்பெறுகிறான். ஆனல் இவ்வுத்தம சோழன் காலத்து இவன் மதுராந்தகமூவேந்த வேளான் என்று குறிக்கப்பெற்றுள்ளான்.[1] கோனேரிராசபுரத்து உத்தம சோழனது கல்வெட்டொன்று[2] ’’இவனை நம் கருமம் ஆராய்கின்ற மதுராந்தக மூவேந்த வேளான்’’ என்று குறிப்பிடுகிறது. “யாண்டு மூன்றாவது முதல் நந்தவனப்புறமாய் தேவதான இறையிலியாக வரியிலிட்டுக்கொள்க என்று நமக்குச் சொல்ல ... ... ... யாண்டு மூன்றாவது முதல் வரியிலிட்டுக்கொள்க என்று நாம் சொல்ல, நம் கருமம் ஆராய்கின்ற கோனூருடையான் பரமேசுவரன் அரங்கனான இருமுடிச்சோழவேந்த வேளானும், சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலையான மதுராந்தக மூவேந்த வேளானும், பருத்திக்குடி யுடையான் கொதுகுலவர் சாத்தனான பரகேசரி மூவேந்த வேளானும், ஆணத்தி[3]