இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை
“அருணிதி தரவரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி எழுந்தருளாயே“ என்ற மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி வரியும், கலியநாயனார்[2] திருப்பெயரும், “அருணிதிகலியன்” என்ற மாத்திரையானே நினைவுக்கு வரும். இந்நாட்டில் வாழ்ந்த பண்டைப் பெரியோர்கள் இங்ஙனம் சமயகுரவர் வாக்குகளைத் தம் பெயராகக் கொண்டிருந்தனர் என்பது நாம் நன்கறிந்த
- ↑ இது ஞானசம்பந்தம் திங்களிதழில் வெளிவந்தது.
- ↑ கலியநாயனார் வரலாற்றை உமாபதி சிவாசாரியார் எழுதிய பின்வரும் திருத்தொண்டர் புராணசாரச் செய்யுளால் அறிக :-
தடமதில் சூழ் ஒற்றியூ ரதனில் வாழும்
சக்கரப்பா டியர் குலமெய்த் தவமா யுள்ளார்
படர்புகழார் கலியனார் நலியும் கூற்றைப்
பாய்ந்தவர்க்கு விளக்கெரிக்கும் பரிவால் மற்றோர்
உடலிலராய்ச் செக்குழல்வார்க் கதுவும் நேரா(து)
உயர்மனைவி யைக்கொள்வார் ஊரும் இன்றி
மிடறுதிரம் அகல்நிறைய அரிய நாதன்
வியன்கைகொடு பிடிப்பஅருள் மேனாவிர.