பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அவை அவனது 13-ஆம் ஆட்சியாண்டு வரை கொடுக்கப்பெற்றனவாம். பார்த்திவேந்திரன் இவ்வரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாதல் கூடும். ஆராய்ந்து பார்த்தால் இவ்விருவருடைய கல்லெழுத்துள்ள இடங்கள் தாம் வேறுபடுகின்றன. எனினும் பார்த்திவேந்திர பன்மனும் ஒரு பரகேசரி;[1] கோவிராசமாராயர்[2] என்று குறித்துக் கொள்கிறான்; மூன்றாவது ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில்[3] பார்த்திவேந்திர ஆதித்தபர்மர் என்றும் குறிக்கப் பெறுகிறான். அவனுடைய மனைவியர்களும் உடையார் தேவியார் வில்லவன் மஹாதேவியார்,[4] பெருமானடிகள் தேவியார் தன்மப்பொன்னார்;[5] பெருமானடிகள் நம்பிராட்டியார் திரிபுவன மஹாதேவியார்[6] ’’ என்று அரச குலத்துக்கு ஏற்றவகையில் சிறப்பிக்கப் பெறுகின்றனர். இவ்வளவு சிறப்புக்களோடு இருந்த இவன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனுக இருத்தல் கூடும் என்பது உறுதி. ’’ பார்த்திவேந்திர ஆதித்தவர்மன் ” என்பதும், அதன் பிற வடிவங்களும், ’’பார்த்திவேந்திரன்’’ என்ற சிறப்புப் பெயரை ஆதித்தன் கொண்டனன் என்பதைக் காட்டுவனவாகும். ஆகவே பார்த்திவேந்திரபன்மனும், ஆதித்த கரிகாலனும் ஒருவரேயாதல் கூடும்.


  1. திருவடந்தை 20 of 1910; S. I. I. III 180.
  2. do 26 of 1910; S. I. I. III 186.
  3. உத்தரமேரூர் - 38 of 1898; S. I. I. III 158.
  4. S. I. I. III 193
  5. 17 of 1921.
  6. S. I. I. III 195 ; 52 of 1898.