31
எனவே இவன் இளைஞனாயிருக்கும்போதே வீர பாண்டியனுடன் போர் செய்தான்; பின்னர்ச் சோழ நாட்டு வடபுலத்தைக் காக்கும் பொறுப்பேற்றுத் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான். இவன் காலம் 956-969.[1]
இனி இவ்விருவரும் ஒருவரேயல்லர் என்பாரும் உண்டு. ’’பாண்டி நாட்டுக்குப் பெரும் படையுடன் சென்று வீரபாண்டியனோடு போர் நடத்திய தலைவர்கள் சுந்தரசோழன் புதல்வனாகிய ஆதித்த கரிகாலன், கொடும்பாளுர்வேள் பூதி விக்கிரமகேசரி, தொண்டைநாட்டுச் சிற்றரசன் பார்த்திவேந்திரவர்மன் என்போர் ’’ என்று திரு. T.v. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்[2] கூறியுள்ளமையின், ஆதித்த கரிகாலனும் பார்த்திவேந்திரனும் ஒருவரேயல்லர் என்ற கருத்துடையவர் இவர் என அறியலாம்.
தென்னாற்காடு ஜில்லா தாயனூரில் வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரிபன்மருடைய (அதாவது இரண்டாம் ஆதித்தனுடைய) கல்வெட்டுக்களும், பார்த்தி வேந்திரனுடைய கல்வெட்டுக்களும் உள்ளன. ஆனால் இவற்றை நோக்கின் இவ்விருவரும் ஒரே காலத்தவர் என்பதையும், இவ்விருவருக்கும் உள்ள உறவுமுறை என்ன என்பதையும் விளக்குவதற்குரிய குறிப்புச் சிறிதேனும் இல்லை[3] என்று ஒரு ஆராய்ச்சியாளர்