32
எழுதியுள்ளார். எங்ஙனமாயினும் பார்த்திவேந்திர பன்மன், முதற்பராந்தகன் காலத்தில் தொண்டை நாட்டில் இருந்து ஆட்சி செய்தவன் என்பது மறுக்கப்படாததொன்று.
பார்த்திவேந்திரனின் மனைவியர்
தக்கோலத்துத் திருவூறல் ஆழ்வார்க்குத் திருப்பள்ளிக்கட்டில் அளித்த அருமொழிநங்கை;[1] உத்தர மேரூரில் ஸ்ரீவெளி விஷ்ணுகிரகத்தில் ஸ்ரீபலி கொட்டுவதற்கு நிலம் வாங்கியளித்தவரும்,[2] ௸ கோயிலில் இரண்டு விளக்கு எரிக்க 192 ஆடுகளை அளித்துப் பன்மைச்சேரி வெள்ளாளர்க்கும் வியாபாரிகளுக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தவரும்[3] ஆகிய பெருமானடிகள் நம்பிராட்டியார் திருபுவன மகாதேவியார்; காஞ்சி புரத்தில் 50 கழஞ்சு பொன் அளித்துப் பன்னைப்புரம் ஊரவர் 100 காடி நெல் வட்டியாகத் தரவேண்டும் என்று ஏற்பாடு செய்த பெருமானடிகள் தேவியார் தருமப் பொன்னர் ஆன திரைலோக்யமாதேவியார்,[4] திருபால் புரத்தில் இரண்டு விளக்கு எரிக்கப் பட்டாளமான எழுநூற்றுவச் சதுர்வேதி மங்கலத்தவரிடத்தில் 25 கழஞ்சு பொன் கொடுத்த வஜ்ஜவை மகாதேவியார்[5] ; உத்தர
மேரூரில் தன்னுல் எழுந்தருள்விக்கப் பெற்ற படிவத்-