பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

(2) இதன் தெற்கில் திருநாராயண வாய்க்கால் வடசிறகில் உள்ள ஊர்மஞ்சிக்கமான மேட்டுச் சிறு கருகேசுவக் கழனி 400 குழி; இதன் எல்லை:- கிழக்கு - அங்காரை மாதேவ பட்டர் பூமிமே லருகே போன நடைகால்; தெற்கு - திருநாரண வாய்க்கால்; மேற்கு - ஐயன் பெருமான் பூமி; வடக்கு முடும்பைப் பொற்கூளி பூமி.


(3) திருநாரணவாய்க்காலுக்குத் தெற்கில் ஊர் மஞ்சிக்கமாய் வரி கொடாதிருந்த பூமி 600 குழி; இதன் எல்லை:- கிழக்கு - வரி செலுத்தாது கிடந்த பூமி, தெற்கு - அவட்டை கிழவன் நிலமான சோமாசி பூமிக்குக் கிழக்கிலுள்ள குண்டில்; மேற்கு - எடுக்குபட்டிகளும் இகுடிகளாய[1] சோமாசி பூமி; வடக்கு - கால் (-நாராயண வாய்க்கால்).

வாரியங்கள்

ஊர்ச்சபையின் உட்கழகங்கள் வாரியம் என்ற பெயராலும், வாரியத்தில் இருந்து யணியாற்றுபவர் வாரியப்பெருமக்கள் எனவும் கூறப்பெற்றனர். காவிரிப் பாக்கத்தில் எட்டு வாரியங்கள் இருந்தன வென்பது மேலே கூறப்பெற்றது. ஆனல் திருப்பாற் கடலில் நான்கு வாரியங்களே இருந்தன என்று பராந்தக சோழனது 12-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று இயம்பு கின்றது.[2]


  1. பொருள் விளங்கவில்லை.
  2. S. I. I. III. 99; 693 of 1904.