உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

ஏரிவாரியப் பெருமக்கள் எனப்பெற்றனர் என்றும் சிலர் கூறுவர்.[1]

கழனிவாரியம் : நன்செய் நிலங்களைப் பற்றியவற்றைக் கவனிப்பது இவர் கடமை.

பஞ்சவார வாரியம் : ’அரசனுக்குக் குடிமக்கள் செலுத்த வேண்டிய நிலவரியையும் பிறவரியையும் வாங்கி அரசாங்கப் பொருள் நிலையத்துக்கு அனுப்புபவர்’ என்பர் திரு. பண்டாரத்தார் அவர்கள். நாடோறும் அரசாங்க அலுவல்களை மேற்பார்வை செய்வதும் கணக்குகளைப் பார்த்தலும் அவர் கடமையாகலாம் என்பர் Dr. S. K. ஐயங்கார் அவர்கள்.[2] ஒவ்வொரு சிற்றூரிலும் அறுவடை ஆனதும் பஞ்ச ஒழிப்பிற்கென்று ஒரு பகுதி நெல் ஒதுக்கிவைக்கப்பெறும். அதனைச் சேர்த்தல், மேற்பார்வையிடல், காத்தல், பஞ்ச காலத்தில் குடிகட்குத் தந்துதவல் முதலிய வேலைகளைச் செய்து வந்தவர் கூட்டமே பஞ்சவார வாரியம் எனப்பெறும் ” என்பர் டாக்டர் இராசமாணிக்கனார் (பல்லவர் வரலாறு, பக்கம் - 228).

கணக்கு வாரியம் : அரசியல் கணக்குகளைப் பரிசீலனை செய்வது இவர் கடமையாகலாம்.


  1. Dr. இராசமாணிக்கம்-பல்லவர் வரலாறு-பக்கம் 214; Dr. Meenakshi - Administration and Social iife under the Pallavas P. 146.
  2. Hindu Administrative Institutions in S. IndiaPage 199.