பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

தொன்று[1] . தந்திவர்மனது திருவல்லிக்கேணிக் கல்லெழுத்தில் (கி. பி. 787ல்) புகழ்த்துணை விசையரையன்[2] என்று ஒருவன் குறிக்கப்பெற்றுள்ளான் ; இவன் பெயர் புகழ்த்துணை நாயனார்[3] திருப்பெயரை நமக்கு நினைவூட்டும். இங்ஙனம் நாயன்மார் பெயர்களை நினைவூட்டும் பல பெயர்கள் கல்லெழுத்துக்களிற் பயிலுதல் நன்கு தெரியவரும்.


 1. “பொன்னார் மேனி“ என்ற சுந்தரர் வாக்கு, “பொன்னார் மேனி பட்டன்“ என்று ஒருவர் பெயராக அமைந்தது. இவ்வாசிரியர் வெளியிட்ட இலக்கியக்கேணி என்ற நூலில் “பொன்னார் மேனியன்“ என்ற கட்டுரை காண்க. நீறணி பவளக்குன்றம், எடுத்த பாதம், மழலைச் சிலம்பு என்ற திருவிசைப்பாத் தொடர்கள் முற்காலத்து மக்கள் பெயராக வழங்கின. (திரு. மு. இராகவையங்கார் சாஸனத் தமிழ்க்கவி சரிதம், பக்கம் 38). முதலாம் இராசராசன் காலத்துத் திருப்பதிகம் ஓத நியமிக்கப்பெற்றவர் பெயர்களையும் காண்க.
 2. புகழ்த்துணை விசையரையனைப் பற்றி ஞானசம்பந்தம் மலர் 18, இதழ் 4, பக்கம் 260 - 264 காண்க.
 3. புகழ்த்துணை நாயனார் வரலாற்றைப் பின்வரும் , திருத்தொண்டர் புராணசாரத்தான் அறிக :-

  "புண்ணியர்கள் புகழ் அழகார் திருப்பத் தூர்வாழ்
  புகழ்த்துணையார் அகத்தடிமைப் புனிதர் சின்னாள்
  மண்ணிகழ மழைபொழியா வற்கா லத்தால்
  வருந்துடலம் நடுங்கிடவும் மணி நீர் ஏந்தி
  அண்ணல்முடி பொழிகலசம் முடிமேல் வீழ
  அயர்ந்தொருநாள் புலம்பஅரன் அருளால் ஈந்த
  நண்ணவரும் ஒருகாசுப் படியால் வீழ்ந்து
  நலமலி சீர் அமருலகம் நண்ணி னாரே."