38
கலிங்கு வாரியம் : ஏரிக் கலிங்குகளை[1] மேற்பார்வை செய்பவர் இவர்.
தடிவழி வாரியம் : வயல்களைக் கண்காணிப்பவர் இவர் ( Fields Supervision Committee); ‘தடி என்னும் அளவையால் அளக்கப்பெறும் பெருவழிகளைப் பார்வையிடுபவர் என்று திரு. S. K. ஐயங்கார் அவர்கள் கருதுவர்.[2]
உறுப்பினரைத் தேர்ந்திடுமாறு
"உறுப்பினரைக் குடவோலை வாயிலாக ஆண்டு தோறும் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கும் இடத்துத் தர்மகிருத்தியம் கடைகாணும் வாரியர், அரசன் ஆனைப்படி நாட்டில் சபை கூடுதற்கென்று அமைத்த பெரு மாளிகையில், இளைஞர் முதல் முதியோர் வரையுமுள்ள எல்லோரையும் குறைவறக் கூட்டி, அன்று அவ்வூர் நம்பிமார் அனைவரையும் அழைத்து வந்து அம்மாளிகையினுள் இருக்கச்செய்து, அவர்க்கு நடுவில் குடத்தினை வைப்பார்கள். அவருள் வயது முதிர்ந்தார் ஒருவர் அக்குடத்தினை மேலே உயர்த்து, அதனுள் ஒன்றுமில்லை என்பதை எல்லோரும் அறியக்காட்டிக் கீழே வைத்த பினனர், ஒவ்வொரு ஊரையும் முப்பது பகுதி(Ward)களாகப் பகுத்து, ஒவ்வொரு பகுதியிலுள்ள ஒவ்வொருவரும் தகுதியுடையரெனத் தமக்குத் தோன்றும் ஒருவர் பெயரைத் தனி ஓலையில் எழுதி, எழுதிய ஓலைகளை ஒருங்கு சேர்த்து இன்ன பகுதியைச் சார்ந்த ஓலை என்பது விளங்க, அப்பகுதியின் பெயர் எழுதிய வாயோலை பூட்டிக் கட்டிக்