43
பண்ணுவாரும் (Surgeons) இருந்தனர். வைத்தியர்களுக்கு மருத்துவக் காணியும் அளிக்கப்பெற்றது.[1] பார்த்திவேந்திரபன்மனுடைய ஐந்தாம் ஆட்சியாண்டுக்குரிய உத்திரமேரூர்க் கல்லெழுத்து,[2] விடம் தீர்க்கும் வன்மையுள்ள மருத்துவரை நியமித்து அவற்கு ஊதியம் அளித்தற்கு இறையிலிநிலம் அளித்த செய்தியைப் புகல்கின்றது. அது ‘விஷஹரபோகம்’ எனப்பெற்றது. விஷஹரபோகமாக அளிக்கப்பெற்ற நிலம் 1280 குழி. இந்த நிலத்துக்கு யாராவது இறை செலுத்தவேண்டும் என்று கூறி இறை வசூலித்தால் தன்மாசனத்துக்கு.[3] இருபத்தைந்து கழஞ்சு பொன் தண்டம் செலுத்த வேண்டும். இக்கல்லெழுத்தில் கானும், சபையாரிடம் பணிபெற்றார். ... ... யுடையாரே அனுபவிக்கப்பெறுவாராகவும் ’’ என்ற பகுதியால் விடம் தீர்த்தலில் வல்ல மருத்துவரைச் சபையாரே நியமிப்பர் என்றும்,விஷஹரபோகத்தை வழிவழி அனுபவிக்க முடியாதென்றும் அறிகிரறோம்.
ஸ்ரீபலிபோகம்
திருக்கோயில்களில் ஸ்ரீபலி என்று ஒரு சடங்கு நடைபெறும். வாத்தியம் முழக்கிச் சோறும் பூவும் திருக்கோயிலில் (குறித்த இடங்களில்) தூவுதலே ஸ்ரீபலி எனும் சடங்காகும். ஸ்ரீபலி இடும்போது விக்கிரகத்