44
தோடு வலம்வருவர். அப்பொழுது இசைக்கருவிகளை வாசிப்பர். ஸ்ரீபலி என்பது, ஹவிர்பலி எனவும் தீயெறி சோறு எனவும் கூறப்பெறும். இதற்கு நிபந்தம் விட்டதாகப் பார்த்திவேந்திரனது 5-ஆவது ஆட்சியாண்டுக் கல்லெழுத்துச் செப்புகிறது.[1] ஸ்ரீமந் நீலகங்கரையன் அண்ணாவன் நாட்டடிகளுக்குத் தாயனூர் ஊரார் விண்ணப்பித்தனர். சூரியகிரகண நாளில் ஸ்ரீபலிபோகம் தரப்பெற்றது. ஸ்ரீபலிக்கு ஐந்துபேர் தணக்கமலை மகா தேவர் திருமுன் வாச்சியங்கள் முழக்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. இதற்குரிய நிலம் 1 (வேலி). இந்த 1 (வேலி) நிலமும் உம்பளநாட்டு மேற்குடிகிழான் திரன் மூதையனும் இவன் தம்பி திரன் உலகடிகளும் பொன்கொடுத்து இறையிழிச்சி, ஸ்ரீபலி போகமாகக் கொடுத்தனர்.
உத்திரமேரூரில் ஸ்ரீ பலிபோகமாக நிலம் அளித்த செய்தி இரண்டு கல்லெழுத்துக்களில்[2] கூறப்பெற்றுள்ளது.
அன்றியும் ஸ்ரீ பலிக்கும் அர்ச்சனாபோகத்துக்குமாக உடையார் தேவியார்[3] வில்லவன் மஹாதேவியார் 2920 குழிநிலம் உத்தரமேரூரில் அளித்தார். சிரத்தாமந்தர்[4] இவ்வறத்தை நன்கு நடைபெறக் கண்காணித்தல்