உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

வேண்டும் ; தவறு நிகழின் 25 கழஞ்சு தண்டம் வசூலிக்கவும் அவர்களுக்கு உரிமை தரப் பெற்றது.[1]

உத்தரமேரூரில் கொங்கரையர் என்பார் ஸ்ரீ வெளி விஷ்ணு கிருகத்தைக்[2] கட்டினார். சில நிலங்களை அவ்வூர் விவசாயிகளிடமிருந்து தம்பிராட்டியார்[3] திருபுவன மகாதேவியார் விலைக்கு வாங்கி அக்கடவுளுக்கு ஸ்ரீ பலி கொட்டுவதற்காகக் கொடுத்தார். பூர்வாசாரம்[4] பெற்று அந்நிலம் இறையிலியாக்கப் பெற்றது.[5]

பாண்டூரில் ஸ்ரீ பலி கொட்டுவதற்கு இசைவல்ல எழுவர் நியமிக்கப் பெற்றனர் என்று இவ்வரசனது 15-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக் கூறுகிறது[6] ஸ்ரீ பலி போகம் எனினும் சீபலிப்பட்டி எனினும் ஒன்றேயாம்.

மூதையனும் உலகடிகளும்

இவ்விருவரும் மேலே கூறிய தாயனூர்க் கல்லெழுத்தில் (பக்-44) கூறப்பெற்ற உடன் பிறந்தோர் ஆவர். இவ்விருவரைப் பற்றியும் தாயனூரில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஒரு பாறையிலுள்ள கல்லெழுத்திலிருந்து ஒரு அரிய செய்தி தெரியவருகிறது[7]


  1. 32 of 1898: S. I. I. III 193.
  2. விஷ்ணு கிருகம் - திருமால்கோயில்.
  3. பார்த்திவேந்திரனது மனைவி.
  4. பூர்வாசாரம் - முன்னாள் வழக்கம்.
  5. 49 of 1898: S. I. 1. III 194.
  6. 75 of 1923.
  7. 364 of 19O9; S. I. I. VoI. III 175.