பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

மேற்குடி கிழான் திரன் மூதையனும் இவன் தம்பி உலகடிகளும் தாயனூரார்க்கு 30 கழஞ்சு பொன் கடன் கொடுத்தனர். ‘‘கடன் ஓலை‘‘ காணாமற்போயிற்று. போனாலென்ன ! வட்டியும் முதலுமாக 45 கழஞ்சு பொன் இவ்விருவரும் திரும்பப் பெற்றனர். காணாது போன ஓலை அகப்பட்டால், ‘அவ்வோல சாவோலையாகக் கருதப்பெற வேண்டும்‘ என்று இக்கல்லெழுத்துப் பகர்கின்றது. இதிலிருந்து கடன் கொடுத்தார் கொண்டார் ஆகிய இவ்விருதிறத்தாருடைய நேர்மை தெள்ளிதின் விளங்குகின்றது !

ஆனையாள் அளித்த தருமம்

பார்த்திவேந்திரபன்மரது 13-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருமால் புரக் கல்லெழுத்து[1] இவ்வரசனது ஆனையாள்பற்றி அறிவிக்கிறது. ஆனையாள், “மன்னன் கண்ணனாகிய சாமாமோக வாரணப் பேரரையன்’ எனும் பெயரினன் ; பெருமாள் பிறகேறும் ஆனையாள் ’’ என்று குறிக்கப் பெற்றுள்ளான்; திருமால் அடியவன்; தாமல் கோட்டத்து வல்லநாட்டு ஸ்ரீ கோவிந்தப்பாடி நின்றருளிய பெருமானடிகளும் ஸ்ரீகாரியம் செய்கின்ற வைஷ்ணவதாசரிடமிருந்து சிற்றியாற்றூரில் 2000 குழி நிலம் விலைக்கு வாங்கி அவ்வூரில் உள்ள ஒரு மடத்தில் உத்தமாக்கிரமாக நாடோறும் ஒரு பிராமணனுக்கு உணவு அளித்தற் பொருட்டுக் கொடுத்தனன்.

தண்ணீர்ப்பட்டி

(செங்கற்பட்டு மாவட்டம்) காட்டூரில் அம்பலம் அமைத்தவர் பெருந்தரத்து மேனாயகம் செய்கின்ற


  1. 328 of 19O6; S. I. I. III 1 88.