47
பட்டையனார் என்பவர் ஆவர். இவர்க்கு இவ்வூரவர் தண்ணீர்ப்பட்டியாக நிலம் விற்றனர் என்று பார்த்தி வேந்திரனது 9-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துள் காணப்பெறுகிறது.[1] தண்ணீர்ப்பட்டி என்றால் என்ன என்று இக்கல்லெழுத்தினின்று அறிந்துகொள்ள இயலவில்லை ; தண்ணீர்ப்பந்தல் தருமத்துக்கு விடப்பெற்ற நிலம் என்பர் சிலர்; எனினும் ஏரி, குளம், வாய்க்கால் முதலிய நீர்ப்பாசனத்துக்குரியவைகளைப் பாதுகாப்பதற்குரிய செலவுகளுக்கென ஒதுக்கப்பெறும் நிலப்பகுதி எனக்கொள்ளுதலும் தகும். இங்ஙனம் கொடுக்கப்பெற்ற நிலத்தின் ஒரு பகுதி, ‘‘ஏரிப்பட்டியில் வடக்கில் கழுவல் நான்குமா’’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. ஏரிப்பட்டியாவது ஏரிகளைப் பழுது பார்த்துச் செவ்வனே வைத்திருக்க மானியமாகக் கொடுக்கப்பெறும் நிலம் ஆகும்.
விராடராசன் தொண்டுகள்
திருமால்புரக் கல்லெழுத்துக்களில் விராடராசன் ஒருவன் பேசப்பெறுகிறான். அனயமன்[2] ஆன பர மண்டலாதித்தியன் என்பது அவன் பெயர். அவன் பார்த்திவேந்திரனது மூன்றாவது ஆட்சியாண்டில்[3] திருமால்புரக் கோயிலையும் சுற்றியுள்ள தாழ்வாரத்தையும் கட்டினான். இவனே பன்னிரண்டாம் ஆட்சி யாண்டில்[4] ஒரு மண்டபத்தைக் கோயிலில் அமைத்தான். இவனோ