48
இவன் மகனோ நாடோறும் பதினைந்து பிராமணர்களுக்கு அன்னம் பாலிக்க நிலதானம் செய்தான்.[1]
அய்யன் மஹா சாஸ்தா
அய்யனார் அல்லது மாசாத்தனார் என்பார் ஹரிஹர புத்திரர் என்றும் கூறப் பெறுவர். இவர்க்கு உத்தர மேருச் சதுர்வேதிமங்கலத்தில்[2] ஒரு கோயில் இருந்தது. இக் கோயிலுக்குப் பார்த்திவேந்திரனது 3-ஆவது ஆட்சி யாண்டில் நிலம் அளிக்கப்பெற்றது.[3] எம்மூர்த் தெற்கில் அய்யன் மஹா சாஸ்தாவுக்குத் திருச்சென்னடைக்கும், நுந்தாவிளக்குக்கும், ஸ்ரீ பலிக்கும், அர்ச்சனா போகத்துக்கும் வைத்த பூமி என்பது கல்லெழுத்து வாசகம்.
(திருச்சென்னடை - நாடோறும் இடையீன்றி நடத்தப்பெறவேண்டிய நித்திய பூசை முதலியன ; நுந்தா விளக்கு - இடையறாது எரியும் விளக்கு ; அர்ச்சனா போகம் - அர்ச்சனைக்காக ஒதுக்கப்பெறும் நிலவருமானம்.)
ஜேஷ்டை
ஜேஷ்டை அல்லது சேட்டையார் திருமகளின்
தமக்கை என்பர். சேட்டையார்க்குக் கோயில் இருந்ததென உத்திரமேரூர்க் கல்லெழுத்து இயம்புகிறது.[4]