பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

பெருங்குறி மகாசபையார்[1] குமண் பாடியிலுள்ள நிலத்தைப் பூர்வாசாரம் பெற்று இறையிலியாக அளித்தனர். (எண்ணாயிரம் என்னும் ஊரில் ஜேஷ்டையார் முதலிய தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்தன வென்று முதலாம் இராசேந்திரனின் 25-ஆம் ஆண்டுக் கல்லெழுத்து நுவல்கிறது.[2] )

சப்தமாதர்கள்

அபிராமி, மகேச்வரி, கெளமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி என்பவர் சப்த மாதராவர். பெரும்பாலான திருக்கோயில்களில் இவர் எழுந்தருள்விக்கப் பெற்றுள்ளனர். இச்சப்தமாதர் பூசைக்காக நிபந்தங்கள் விடப்பெற்ற செய்தியைச் சில கல்லெழுத்துக்கள் குறிப்பிடுகின்றன. இராசகேசரியின் 25-ஆம் ஆண்டில் ஆலம்பாக்கத்திலும்[3] முதல் இராசராசனின் 23-ஆம் ஆட்சி யாண்டில் ஆத்தூரிலும்[4] முதல் இராசேந்திரனின் 25-ஆம் ஆட்சியாண்டில் எண்ணாயிரத்திலும்[5] சப்த மாதர்கோயில்களைப்பற்றி அறிவிக்கும் சாசனங்கள் கிடைத்துள்ளன. செங்கற்பட்டு ஜில்லா வேளச்சேரியில் பார்த்திவேந்திரனுடைய 10-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துளது.[6] சோழநாட்டு மழநாட்டுத் திருவேட்பூ ருடை


  1. அகரப்பிரமதேயக்கிராமத்துச் சபையினர்.
  2. 335 Of 1917.
  3. 705 Of 1909.
  4. 245 of 193O.
  5. 335 of 1917.
  6. 316 of 1911 ; S. I. III 191.

4