பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

யான் தேவடிகள் என்பார் சப்த மாதர்க்கு நாட் பூசைக்காகப் பூதிபாக்கன் செறு தடி நாலினால் நிலம் 200 குழியும், இரண்டெற்றி என்னும் நிலம் 539 குழி ஆக 739 குழி நிலம் இறையிலியாகக் கொடுத்தார். சப்த மாதரைப் பூசிக்கும் பூசகரை ”மாத்ருசிவர்” என்று இக்கல்லெழுத்து அறிவிக்கிறது.

குமரடி நங்கை தொண்டு[1]

தக்கோலம் என்றவூர் திருவூறல் என்ற பெயருடைய திருப்பதிகம் பெற்ற சிவதலமாகும் ; ”ராஜமார்த்தாண்ட சதுர்வேதிமங்கலம்” என்னும் பெயருடையதாயிருந்தது. குமரடி நங்கை என்பார், திருவூறல் கோயிலில் இரணசிங்கவீரர் பள்ளிக்கட்டில் மண்டபத்தில் “களிகை விடங்கர்” என்ற திருமேனியை எழுந்தருள்வித்தார் ; நாள் வழிபாட்டிற்கு 92 கழஞ்சு பொன் இச்சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடம் ஒப்படைத்தார். இக்குமரடி நங்கையின் தாய் பெயர் ”நந்தி நங்கை”; இந்நந்தி நங்கையின் தந்தை பெயர் ”திருவூறல் தேவனார்” என்பதாகும்.

வட்டி

பெருமானடிகள்[2] தேவியார் தருமப்பொன்னார் ஆன திரைலோக்ய மாதேவியார் 50 கழஞ்சு பொன் அளித்து 200 காடி நெல் வட்டியாகத் தரவேண்டும் என்று ஏற்பாடு செய்தார்.[3] இவரே 50 கழஞ்சு பொன்-


  1. 19 Of 1897.
  2. பார்த்திவேந்திரபன்மன்
  3. 17 Of 1921.