பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

பராந்தக சோழனுடைய ஆட்சியிறுதியில் “கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவனாகிய” மூன்றாம் கிருஷ்ணனுடைய 20-ஆம் ஆட்சிக்குரிய திருவொற்றியூர்க் கல்லெழுத்தில்[1] சதுரானன பண்டிதர் என்பார் 100 நிஷ்கா பொன் திருவொற்றியூர்க் கோயிலுக்கு அளித்த செய்தி கூறப்பெறுகிறது. இனி இக்கால வெல்லைக்கு ஒரு நூற்றண்டுக்குப் பின்னர்த் தந்த முதற் குலோத்துங்க சோழனுடைய திருவாமாத்தைர்க் கல்வெட்டிலும் நிஸ்கா குறிக்கப் பெற்றுள்ளது.[2] இவற்றால் நிஷ்கா என்பது ஒரு பொன் நாணயம் என்றும், ஒரு கழஞ்சு எடையுள்ளது என்றும் தெரியலாம்.

தொகுப்புரை

இவ்வேந்தன் ஆட்சியில் தொண்டை மண்டலத்தில் அமைதி நிலவியது ; ஊராட்சி செவ்வனே நடைபெற்றது ; இலக்கண விரிவுரையாற்ற நிலமளித்தல் போன்ற செயல்களால் கேள்விச்செல்வம் ஓங்கியது ; விஷ வைத்தியம் செய்ய மருத்துவரிருந்தனர் ; கோயில்களில் எல்லாச் சடங்குகளும் நடந்தன ; உடையாக் தேவிமார் கோயில்களுக்கு நிபந்தம் அளித்தனர் ; இசைவல்லார் ஆதரிக்கப்பெற்றனர் : பொதுமக்கள் கோயில் காரியங்களில் கவனம் செலுத்தினர் , திகுமேனிகளை எழுந்தருள்வித்தனர் : சைவம் வைணவம் ஆகிய இரு சமயங்களும் ஓங்கி வளர்ந்தன ; அய்யனார், சேட்டையார், சப்த மாதர்கள் கோயில்களில் இடம் பெற்றிருந்தனர் : அந்தணர் அருந்தவர்க்கு அன்னம் பாலிக்கப்பெற்றன என்றின்னோரன்ன அறிகிறோம்.



  1. 181 of 913.
  2. 25 of 1922