பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மதுராந்தகன் கண்டராதித்தன்

பன்னிரு திருமுறைகள்

சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் அருளிய திருநெறிய தமிழ் ; 4, 5, 6 திருமுறைகள் அப்பர் அருளிய அருந்தமிழ் ஏழாம் திருமுறை சுந்தரர் செந்தமிழ் ; எட்டாம் திருமுறை மணிவாசகர் திருவாசகம் ; ஒன்பதாம் திருமுறை கருவூர்த்தேவர் முதலிய ஒன்பதின்மர் பாடிய திருவிசைப் பாவும் திருப்பல்லாண்டும் ; பத்தாம் திருமுறை திருமூலர் திருமந்திரம் : பதினோராந் திருமுறை திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் முதலிய பன்னிருவர் அருளிய பைந்தமிழ் ; பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் ஆகும்.

முதற் கண்டராதித்தன்

இப்பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப் பாவில் கோயில் எனப்பெறும் சிதம்பரத்தின்மேல் பாடிய திருவிசைப்பாப் பதிகங்களில் ஒன்று, கண்டராதித்தர் என்பவரால் பாடப்பட்டது. இக் கண்டராதித்தர் பிற்காலச் சோழர் பேரரசில் கி. பி. 907-953 வரை பேரரசனாக வீற்றிருந்த முதற் பராந்தக சோழனின் இரண்டாவது மகனாவர். இவர் சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர் ; கி. பி. 950 முதல் 957 வரை சோழவரசனாக வீற்றிருந்தவர். இவரது மனைவியார் எல்லையற்ற சிவபக்தியுடையராய் மாதேவடி-