பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

கோயில் நடைமுறைச் செய்திகளை ஆய்ந்தான் ; கோயில் நிலங்கள் பிறரால் கைக்கொள்ளப்பட்டமையையும், இறைவனுக்குரிய நிவேதனம் இரண்டு நாழி அரிசியாகக் குறைக்கப் பட்டமையையும் கண்டு பிடித்தான் ; ஐவர் அடங்கிய ஒரு குழுவுடன் இவற்றை ஆராய்ந்தான் ; மடைப் பள்ளிக்குப் பொறுப்புடையவர்களிடம் குற்றம் கண்டு தண்டம் விதித்தான் (283 of 1906) ; இச்செய்தி முதலாம் இராசராசனுடைய 12-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் குறிக்கப் பெற்றுள்ளது (282 of 1906).

திருவல்லத்தில்

கோ இராசகேசரிவர்மனுடைய ஏழாவது ஆட்சியாண்டில் இவன் திருத் தீக்காலி வல்லத்தில் இருந்துள்ளான். பேராசிரியர் கீல் ஹார்ன் அவர்கள் கணக்குப்படி 26-9-991-ல் ஐப்பசித் திங்கள் முழுமதி ரேவதி விண் மீன் கூடிய சந்திர கிரகணத்தன்று திருத் தீக்காலி வல்லத்துப் பெருமாளுக்குச் சகஸ்ர கடாபிஷேகம் செய்வித்து வழிபாடாற்றினான். அப்பொழுது இறைவனுக்குப் படைக்கப்பெறும் திவேதனம் இரண்டு நாழி அரிசியாக இருத்தலையும், கறியமுது நெய்யமுது தயிரமுது படைக்கப் பெறாமல் இருந்தமையையும், திருநுந்தா விளக்கு ஏற்றப் படாமையையும் கண்டான். அத்திருக்கோயில் சிவப் பிராமணரையும் தீக்காலி வல்லத்து அவையாரையும் அழைத்து, ’’இக்கோயில் பெருமானுடைய வரவும் செலவும், அரசன் ஆணைக்கும் திருவோலைக்கும் உரிய வண்ணம் சொல்லுக ’’ என்று வினவச், சிவப்பிராமணரும், தீக்காலி வல்லத்து அவையாரும் (சொன்னார்கள்). எஞ்சிய செய்தியுள்ள கல்வெட்டுப் பகுதி கட்டப் பட்டு இருக்கின்றமையின் மேற்கொண்டு மதுராந்தகன் கண்ட-