பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

ராதித்தன் எடுத்துக் கொண்ட நடவடிக்கை தெரிய கிற்றிலது. எனினும் இக்கல்வெட்டாலும், இம்மதுராந்தகன் கண்டராதித்தன் கோயில் கணக்குகளையெல்லாம் ஆராயும் படியான செல்வாக்கோ அல்லது அலுவலோ உடையனாயிருந்தான் என்பது உறுதிப் படுகிறது ( 1O of 1890; S. I. I. Volume III No 49.)

இவன் மேற்குறித்த ஆண்டிலேயே திருவல்லம் கோயில் கணக்குகளை ஆய்ந்தான் ; அக்கோயிலுக்கு நாள்வழிபாடு நன்கு நடைபெற அவ்வருவாய் குறைவாயிருத்தலைக் கண்டு, தான் ஏழு கழஞ்சு நான்கு மஞ்சாடி பொன் அளித்தான் ; கோயில் நிலங்களைச் சிவப் பிராமணர்கள் தமக்குரியதாக ஆக்கிக் கொண்டமையைக் கண்டு பிடித்து, அங்ஙனம் செய்தவர்களுக்கு 74 கழஞ்சு பொன் அபராதம் விதித்தான் ; இவற்றிற்கு ஒரு திட்டமும் வகுத்தான் ; அத்திட்டங்களை யார் யார் கண்காணிக்கவேண்டுமென்பதையும் ஏற்பாடு செய்தான் (218 of 1921).

குடிமல்லத்தில்

இராசகேசரி வர்மனுடைய நான்காம் ஆட்சியாண்டில் கண்டராதித்தன் குடிமல்லத்தில் இருந்தான் ; அங்கு இறைவன் திருமேனி ஒன்றை எழுந்தருளுவித்து நாள் வழிபாட்டிற்கு நிலதானம் அளித்துள்ளான். இதனை அவ்வூர்க் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது (222 of 1903).

முடிப்புரை

இதுகாறுங் கூறியவாற்றால் மதுராந்தகன் கண்டராதித்தன் தொண்டை நாட்டிலே கோயில்களைக் கண்-