உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அதிகாரிகள் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு[1] மருதூர் மருதூருடையான் அருணிதி கலியனுக்கு ஒட்டிக் குடுத்த பரிசாவது.”★

சோழப் பெருமானடிகள்

மேற்குறித்த கல்லெழுத்துப் பகுதியில் அருணிதி கலியன் என்பான் சோழப் பெருமானடிகள் அதிகாரிகள் என்று மரியாதையாகக் கூறப்பெற்றுள்ளான். சோழப் பெருமானடிகள் என்பது சோழவரசன் எனப் பொருள்படும். இங்குக் குறித்த சோழவரசன் முதற் பராந்தக சோழன் ஆவன். இவன் 907 முதல் 953 வரை ஆட்சி செய்தவன் ; மதுரை கொண்ட கோப்பர கேசரி பன்மன் என்றும் இக்கல்லெழுத்தில் குறிக்கப் பெற்றுள்ளான் ; இவனுடைய 3-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்களிலிருந்தே இவன் இங்ஙனம் கூறப்பெற்றுள்ளமையின் இவன் கி. பி. 910 லேயே மதுரையைக் கைப்பற்றினான் என்றறியலாம். இவனிடம் தோற்ற பாண்டிய அரசன் மூன்றாம் இராசசிம்மன் ஆவன்.[2]

அருணிதி கலியனுக்கு ஒட்டிக்கொடுத்த பரிசு[3]

அருணிதி கலியனொடு ஆனைமங்கலத்துச் சபையார் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அது மேற்குறிப்பிட்ட முதற் பராந்தகசோழனது முப்பத்துமூன்றாவது,


  1. இஃது பிற்காலத்து அருமொழிதேவ வளநாட்டின் பகுதியாயிற்று.
  2. கி. பி. 575-ல் கடுங்கோனால் நிறுவப்பெற்ற பாண்டிய அரசு கி. பி. 915- ல் பராந்தகசோழனால் இராசசிம்மன் காலத்தில் அழிவுற்றது.
  3. ★ ஒட்டிக்கொடுத்த பரிசு - ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்த ஒப்பந்தம்.