பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொய்கைநாடு கிழவன்[1]

பொய்கைநாடு

சோழமண்டலம் முதலாம் இராசராசசோழனது ஆணையின்படி ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[2] அவற்றுள் இராசேந்திர சிங்கவளநாடு என்பது ஒன்று. ஒவ்வொரு வளநாடும் சிலநாடு[3]களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பொய்கை நாடு என்பது இராசேந்திர சிங்க[4] வளநாட்டைச் சேர்ந்தது. திருவையாறு[5] திருநெய்த்தானம்[6] , திருமழபாடி[7] என்பன இப்பொய்கை


  1. இது ஞானசம்பந்தத்தில் வெளி வந்தது.
  2. அவையாவன: அருண்மொழிதேவ வளநாடு; க்ஷத்திரிய சிகாமணி வளநாடு; உய்யக்கொண்டான் வளநாடு; தித்தவிநோத வளநாடு; பாண்டிய குலாசனி வளநாடு; கேரளாந்தக வளநாடு: இராசாசிரிய வளநாடு; இராசராச வளநாடு; இராசேந்திர சிங்க வளநாடு (பண்டாரத்தார் - சோழர் வரலாறு - பாகம் 1 - பக்கம் 1 18 அடிக்குறிப்பு.)
  3. நாட்டை இக்காலத்துத் தாலூகாவிற்குச் சமமாகவும், வளநாட்டை ஜில்லாவிற்குச் சமமாகவும் கொள்ளலாம்
  4. இராசேந்திர சிங்கன் என்பது முதலாம் இராசராசனது சிறப்புப் பெயர்களில் ஒன்று.
  5. ராஜராஜ தேவர்க்கு யாண்டு 22-ஆவது வடகரை ராஜேந்திர சிங்கவள நாட்டுப் பொய்கை நாட்டுத் தேவ தானம் திருவையாற்று ஒலோகமாதேவீச்சரத்து மகாதேவர் (S. I. I. Volume V 516)
  6. ஸ்வஸ்திஸ்ரீ கோவிரச கேசரி பன்மர்க்கு யாண்டு: 3-ஆவது பொய்கை நாட்டுக் கீழ் பிலாற்றுத் தேவதானம் திருநெய்த்தானத்து மகாதேவர் (S. 1. 1. Vol. V No. 580)
  7. கோப்பரகேசரிபன்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கியாண்டு 16-ஆவது ராஜேந்திர சிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருமழபாடியுடைய மகாதேவர்.